ஆபிரிக்காவில் 18,700 குரங்கம்மை தொற்றாளர்கள் பதிவு

ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. ஒரே வாரத்தில் 1,200 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு ஆபிரிக்காவில் குரங்கம்மைத் தொற்றால் சுமார் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோ குடியரசு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அடையாளங்காணப்பட்டுள்ளது. அங்கு ஒரே வாரத்தில் சுமார் 1,000 நோய்த் தொற்றாளர்கள் பதிவானதோடு 24 பேர் உயிரிழந்தனர்.ஆபிரிக்காவுக்கு அப்பால் ஸ்வீடனிலும் பாகிஸ்தானிலும் குரங்கம்மைத் தொற்றாளர்கள் பதிவாகின. உலகளவில் நாடுகள் விழிப்புநிலையை அதிகரித்துள்ளன. குரங்கம்மைத் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply