இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: ஐவர் கைது
இந்தியாவின் டெஹ்ராடூனில் உள்ள பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 12ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற.
டெல்லியில் இருந்து டெஹ்ராடூனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்த உத்தரகாண்ட் அரசு பேருந்துக்குள் யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற ஐந்து நாட்களுக்கு பின்னரே பொலிஸாருக்கு இது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பேருந்தின் சாரதியும், நடத்துனரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடயவியல் குழு உள்ளே இருந்து (பேருந்து) ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி 16 அல்லது 17 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், தான் ஒரு அனாதை என்றும், பஞ்சாபில் வசிப்பவர் என்றும் குறித்த சிறுமி அதிகாரிகளிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுமி கூறிய தகவல் பொய் எனவும் பின்னர் அவரின் தாய், தந்தையர் உயிருடன் இருப்பதை உறுதிசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சிறுமி கடந்த காலங்களில் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply