எவ்வித எதிர்ப்பு வந்தாலும் வடபகுதிக்கு அத்தியாவதிய பொருட்களை கொண்டு செல்லப்படும்
எவ்வித எதிர்ப்பு வந்தாலும் வடபகுதி மக்களுக்கு அத்தியாவதிய பொருட்களை கொண்டு செல்வதற்கு கடற்படையினர் தமது முழு பாதுகாப்பினையும் வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று காலை யாழ் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற றுஹுன, நிமலவ எனும் இரு கப்பல்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் தாக்க முற்பட்டபோது கடற்படையினர் அதனை முறியடித்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஏ 9 பாதை மூடப்பட்டதிலிருந்து வடபகுதி மக்களுக்கு அத்தியாவதிய பொருட்களை கொண்டு செல்வதற்கு இடமளிக்கவிடாது விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தஸாநயக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply