கராச்சியில் இருந்து கப்பலில் வந்தனர் மும்பைத் தாக்குதல் கும்பல்
மும்பையில் பிடிபட்ட 3 லஷ்கர்- இ தாயிபா இயக்க உறுப்பினர்கள், கராச்சி துறைமுகத்தில் இருந்து வியட்நாம் சென்ற கப்பலில் வந்து படகின் மூலம் மும்பைக்கு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் மூலம், 2002 ஆம் ஆண்டு அக்ஷர்தாம் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் ஒரு நேரடித் தாக்குதலை லஷ்கர்- இ தாயிபா இயக்கத்தால் நடத்த முடியும் அளவு நமது பாதுகாப்பு பலவீனமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முல்டான் அருகிலுள்ள ஃபரித்கோட் என்ற இடத்தைச் சேர்ந்த அஜ்மல் அமீர் கமல் என்பவர் உள்பட 3 பாகிஸ்தானியர்கள் நேற்று மும்பையில் மத்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் லஷ்கர்- இ தாயிபா இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கராச்சி துறைமுகத்தில் இருந்து வியட்நாம் செல்லும் வர்த்தகக் கப்பலில் ஏறி, மும்பையில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இறங்கி, படகுகள் மூலம் இந்தியா கேட் பகுதியை அடைந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தாங்கள் மொத்தம் 12 பேர் வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடற்கரையை அடைந்தவுடன் 5 குழுக்களாகப் பிரிந்து சென்று 5 நட்சத்திர விடுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர். மேலும், நீண்ட நேர மோதலிற்கு ஆயத்தமாக பெருமளவு உலர்ந்த பழங்களை பயங்கரவாதிகள் வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply