ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த போது, நாட்டை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுத்தார் .

இதன் போது எதிர்க்கட்சித் தலைவரான அவர், எம்மிடம் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். அடுத்த தலைமுறையை விட அடுத்து வரும் தேர்தல் தொடர்பிலேயே நாம் கவலைப்படுகிறோம் எனக் கூறி நெருக்கடியிலிருந்த நாட்டைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.

அந்த நேரம், 53 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரும் 03 பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரும் நாட்டைப் பொறுப்பேற்க மறுத்தனர்.ஆனால் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இந்த நாட்டைப் பொறுப்பேற்று பாதுகாத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே.

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்கள் கைகளில் உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைவரும் வாக்களிப்பார்கள். மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு 1,700 ரூபா சம்பளம், காணி உரிமை, கல்விக்கான அபிவிருத்தி அனைத்தையும் அவரே பெற்றுக் கொடுத்துள்ளார்.

மக்கள் இது தொடர்பில் சிந்தித்து, நுவரெலியா மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply