பங்களாதேஷில் குறிவைக்கப்படும் இந்து ஆசிரியர்கள்: இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய போராட்டகாரர்கள்
பங்களாதேஷில் உள்ள இந்து சிறுபான்மையினர் தொடர்ந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிகரித்து வரும் ஆசிரியர்கள் தங்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
சிறுபான்மையினர் மீதான இலக்கு தாக்குதல்களுக்கு மத்தியில், குறைந்தது 50 இந்து கல்வியாளர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஷாலில் உள்ள பேக்கர்கஞ்ச் அரசு கல்லூரியின் முதல்வர் சுக்லா ராணி ஹால்டர் பதவி விலகிய சம்பவமும் இதில் ஒன்று.
பங்களாதேஷ் நாளிதழான Prothom Alo படி, ஓகஸ்ட் 29ஆம் திகதி, மாணவர்கள் மற்றும் வெளியாட்கள் ஒரு கும்பல் அவரது பதவியை ராஜினாமா செய்யக் கோரி அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டது.
பல மணிநேர மிரட்டலுக்குப் பிறகு, மன உளைச்சலுக்கு ஆளான ஹால்டருக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை, ஒரு வெற்றுத் தாளில் “நான் ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
ஓகஸ்ட் 18 அன்று, அஜிம்பூர் அரசு பெண்கள் பாடசாலை மற்றும் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 50 மாணவிகள் முதல்வர் கீதாஞ்சலி பருவாவை முற்றுகையிட்டு, உதவித் தலைமை ஆசிரியர் கவுதம் சந்திர பால் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஷாநசா அக்தர் ஆகியோருடன் சேர்ந்து இராஜினாமாவைக் கோரியிருந்தனர்.
“ஒகஸ்ட் 18க்கு முன், அவர்கள் என் இராஜினாமாவைக் கோரவில்லை. எனினும், அன்று காலை, அவர்கள் என் அலுவலகத்தைத் தாக்கி, என்னை அவமானப்படுத்தினர்” என்று கீதாஞ்சலி பருவா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் இராஜினாமா கடிதங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்படுவதைக் காட்டுகின்றன.
பங்களாதேஷில் உள்ள இந்து கல்வியாளர்களிடையே ஒரு தெளிவான பயம் மற்றும் உதவியற்ற உணர்வு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பங்களாதேஷ் இந்து, பௌத்த, கிறிஸ்தவ ஒய்க்யா பரிஷத்தின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ர ஒய்க்யா பரிஷத், சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பின் போது இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது.
மேலும் இந்து சமூகம் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சகிப்பின்மை குறித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply