ஒரு புதிய தாயகத்தை நிர்மாணிப்பதில் பங்குதாரர்களாவோமாக…
ஐக்கிய இலங்கையின் தேசிய சுதந்திரத்தின் பின்னரான ஆறு தசாப்தங்களுக்கு மேலான காலகட்டத்திலே தற்போது போல அரசியல் ரீதியாக மிகவும் விறுவிறுப்பானது முக்கியமானதுமான காலகட்டம் வேறெப்போதும் இருந்ததில்லை.
உலக அளவில் ஏகாதிபத்திய பிற்போக்குச் சக்திகள், இன்று உலக சமூகப் பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், உணவு, எரிபொருள், நிதி, சுவாத்திய நிலை மாற்றம் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்துத் தடுமாறும் போது, நாம் எம்மை ஆட்டிப்படைத்த பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து முற்றாக மீட்கப்பட்டுள்ளோம். இனி தேசத்தைக் கட்டியெழுப்பும் கைங்கரியமே எம் முன்னுள்ள பிரதான செயல் திட்டமாக உள்ளது.
இன்றைய சர்வதேசிய தேசிய அரசியல், சமூக, பொருளாதார பின்னணியில் பல இன மக்கள் வாழும் இந்த நாட்டில் இன, மொழி, மத யதார்த்தங்களை புரிந்துணர்வுடன் ஏற்றுக்கோண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, தேசிய ஐக்கியத்தை உருவாக்கி, சமதானத்தையும் சமூக முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரத்தை பலப்படுத்துவதன் மூலம் தேசத்தின் உள்ளும் புறமும் இருக்கும் சகல விதமான இனவாத பிற்போக்குச் சக்திகளையும் தோற்கடிப்போம்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் சகல இனவாதிகளையும் மோசடிக்காரர்களையும் படு தோல்வியடையச் செய்து அனைத்து முற்போக்குச் சக்திகளையும் வெற்றி பெறச் செய்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி ஒரு புதிய தாயகத்தை நிர்மாணிப்பதில் பங்குதாரர்களாவோமாக…
மத்திய குழு சார்பாக,
ப. உதயராசா
செயலாளர் நாயகம்
டிசம்பர் 1, 2009
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply