தனியார்துறையினரின்   அடிப்படை சம்பளம் 21000 ரூபா

தனியார்துறையினரின் அடிப்படை சம்பளமாக 21000 ரூபா வழங்க தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தனியார் துறையில் சேவை செய்துவரும் ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் 12, 500ரூபாவாகவே தற்போதுள்ளது. அந்த தொகையை 5ஆயிரம் ரூபாவால் அதிகரித்து, தனியார் துறையினரின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை 17,500 ரூபாவாக அதிகரிக்க இந்த சட்டமூலம் ஊடாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அத்துடன் இந்த 17, 500 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 2016 வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 3500 ரூபாவும் அதிகரிக்கப்படும் . அதன் பிரகாரம் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளமாக 21000 ரூபா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு கீழ் தொழில் செய்யும் நபர்களுக்கு இந்த குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை வழங்க சட்ட பூர்வமாக அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply