ஜே.வி.பி. திசைகாட்டியின் பின் மறைந்தாலும் மணியையும் சிவப்பு நிறத்தையும் கைவிடவில்லை : திலும் அமுனுகம
வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பாஸ்போர்ட் போட்டோவை மாற்றி வேறு பெயரில் விசா பெற்று செல்வதுபோன்று இன்று இதே திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே .வி.பி ) திசைகாட்டி என தனது முன்னைய முகத்தை மறைத்து, அவ்வாறான வேலைத்திட்டத்தை பின்பற்றி மக்களிடம் வலம் வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி தனது நிறத்தையும் அடையாளத்தையும் மாற்றிக் கொண்டு திசைகாட்டியில் இருந்து மறைந்தாலும் அவர்கள் மணியையும் சிவப்பு நிறத்தையும் கைவிடவில்லை என்றும் அவர் கூறினார்.
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கண்டி ஈ. எல். சேனாநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் ,
அரசியல் மேடைகளில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இல்லை என்று நாம் எப்போதும் கூறி வருகிறோம். நாடு ஆபத்தில் இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் இன்று பங்களாதேஷ் எதிர்கொண்டிருக்கும் கதியை எமது நாடும் சந்தித்திருக்கும்.
அப்போது நாடு ஆபத்தில் இருக்கும் போது தலைவராக நின்று நாட்டைக் கைப்பற்ற முன்வரும் பொழுது முதுகெலும்பு இருப்பதா இல்லையா என்பதை அறிந்திருந்தோம் .
நாம் எவ்வளவுதான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாக இருந்தாலும், இக்கட்டான காலத்தில் இந்த நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும். நாமல் கேட்டதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த பிரச்சனை அவருடைய சிறிய தந்தையினாலும் எங்களாலுமே ஏற்பட்டது.
எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தது. ஈஸ்டர் தாக்குதலின் போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அவர் வெடிகுண்டை வெடிக்கவைக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வெடிகுண்டுகள் வெடிக்கும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு சீர் குலைந்ததற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்.
அந்த காலத்தில் செய்ய முடியாததொன்றை தற்பொழுது நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதால் அதில் எந்த மாற்றமும் அடையப்போவதில்லை .
ரணில் என்ன செய்தார் என்று பார்த்தோம். இதை செய்ய அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. சில சிறுவர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை உடைக்கச் சென்ற போது ஜனாதிபதி கப்பலில் ஏறி நடுக்கடலுக்குச் சென்றார். அவர் அப்படி ஓடிப்போவதற்கு எந்த காரணமும் இல்லை. நாடு அழியும் போது நாட்டை விட்டு வெளியேறுவது தவறு. இது பொறுப்பை மீறுவதாகும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு 20 மில்லியன் டொலர்களுடன் காலியான திறைசேரியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
எமது எம்.பி.க்களின் 70 வீடுகள் எரிக்கப்பட்டதுடன், ஒரு எம்.பி.யை வீதியில் இழுத்துச் சென்று நாயைப் போல் கொன்றனர்.
லால்காந்த, ஹதுன்நெத்தி போன்ற பாராளுமன்றத்திற்குச் சென்று பாராளுமன்றத்தை தீயிட்டு கொளுத்த வாருங்கள் என மக்களை அழைத்தனர். இப்படித்தான் இவர்கள் பிரச்சினைகளை தீர்க்கிறார்கள். 1971ம் ஆண்டு போலவே, 1988ம் ஆண்டிலும் துப்பாக்கியை தலையில் வைத்து அதிகாரத்தை கேட்டுள்ளனர். வாக்கு மூலம் ஆட்சியைப் பிடிக்காமல், பலவந்தமாக ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஜே .வி.பி. யால் கொல்லப்பட்டவர்கள் குறைந்தது ஐந்து பேராவது இருப்பார்கள் அப்படியிருந்த இவர்களுக்கு வாக்களிப்பீர்களா? இந்த ஆத்மாவில் மாவின் திசைகாட்டிக்கு ஆட்சியை பெற முடியாது. ஏனெனில் கிராமங்களில் உள்ள மக்களின் கண்ணீருக்குப் பிறகு இவர்களுக்கு யார் வாக்களிப்பது?
இ.போ. ச. வண்டி ஓடினால் , சாரதி சுட்டுக் கொல்லப்படுவார் . எத்தனை தோட்ட அதிகாரிகளை இவர்கள் கொன்றார்கள்? விடுதலைப் புலிகள் தனி நாடு கோரி யுத்தம் செய்தார்கள், ஆனால் ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரி யுத்தம் செய்தது. ஆகவே இந்த நேரத்தில், இதயத்தால் வாக்களிக்காமல் சரியாக மூளையினால் சிந்தித்து வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply