சரத் பொன்சேகா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் கிடைக்கும்: சோமவன்ச அமரசிங்க

எதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் யு.என்.பி மற்றும் ஜே.வி.பி ஆதாரவு வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா  வெற்றியீட்டினால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அண்மையில் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய விஜயத்தின் பின்னர் இந்தக் கருத்துக்ளை வெளியிட்டுள்ளார்.
 
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்த தலைவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் வரிச் சலுகையை நீட்டிக்க முடியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் அறிவித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், இந்த கூற்றினை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply