ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிட தடை

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடுவதனால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம் எனவும் அவற்றை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply