அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் ஒரு இராணுவத் தளபதியிடம் நாட்டின் மிக முக்கிய ஆட்சிப் பொறுப்பை வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்: விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண
அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் ஒரு இராணுவத் தளபதியிடம் நாட்டின் மிக முக்கிய ஆட்சிப் பொறுப்பை வழங்குவது எந்த வகையில் நியாயமாகுமென விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக நீரோட்டத்தில் ஆட்சி அதிகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் இராணுவத் தளபதி ஒருவருக்கு ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பி விடுக்கும் கோரிக்கை அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி ஒருவருக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வழங்குவது பொருத்தமாகாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை இராணுவத் தளபதி ஒருவரிடம் ஒப்படைக்க முடியாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக லங்கா சமசமாஜக் கட்சி அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply