பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்தப்படமாட்டாது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பையடுத்து நேற்று முன்தினம்(21) இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று(22) நண்பகல் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அது நீடிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்த அவர்,
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னர் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்றுக் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனையடுத்து அந்த ஊரடங்குச் சட்டம் மீண்டும் நேற்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பையடுத்து தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்டன. அதற்கிணங்க தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நடவடிக்கைகள் நேற்று தொடர்ந்ததுடன் நேற்றைய தினம் பிற்பகல் அந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்தும் நாடு முழுவதுக்குமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply