செத்து மடியும் பொது மக்கள் உடனடி போர் நிறுத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் அழைப்பு : இஸ்ரேல் மறுப்பு

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு அழைப்பு விடுப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவுகளை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வெற்றி பெற்று வடக்கு இஸரேலில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக சொந்த இடங்களுக்கு திரும்புவரை முழு பலத்துடன் போராடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி விரைவில் போர்நிறுத்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமைதியான தீர்வுக்கான நம்பிக்கையை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் தகர்த்தெறிந்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நட்பு நாடுகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

அதே நேரத்தில் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தீவிர விவாதங்களைத் தொடர்ந்து காசாவில் போர் நிறுத்தத்திற்கும் ஆதரவை தெரிவித்தன.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கிற்குச் செல்லும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்த முன்மொழிவுக்கு தனது பதிலை இன்னும் தெரிவிக்கவில்லை.

எனினும், தனது இ ராணுவத்தை போரிட அறிவுறுத்தியதாக கூறினார்.

இஸ்ரேல் போர்நிறுத்தத்தை நிராகரித்து ஹெஸ்பொல்லாவைத் தாக்க வேண்டும் என்று நெதன்யாகு அரசாங்கத்தில் உள்ள கடும்போக்காளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு லெபனானில் உள்ள 75 ஹெஸ்பொல்லா இலக்குகளை ஒரே இரவில் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சமீபத்திய கொடிய போரில் லெபனான் நகரமான யூனினில் குறைந்தது 23 சிரியர்கள், கொல்லப்பட்டதாக நகர மேயர் அலி குசாஸ் தெரிவித்துள்ளார்.

வியாழன் காலை பல பகுதிகளில் பயங்கரவாதிகள், இராணுவ கட்டிடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் உட்பட டஜன் கணக்கான ஹெஸ்பொல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானில் இருந்து மேற்கு கலிலி பகுதியை நோக்கி சுமார் 45 எறிகணைகள் ஏவப்பட்டன, அவற்றில் சில திறந்த நிலத்தில் விழுந்ததில் இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வடக்கு எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என்பதை உறுதி செய்வதாக நெதன்யாகு மீண்டும் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply