யுக்திய மறுசீரமைப்புடன் விரைவில் முன்னெடுக்கப்படும் : பதில் பொலிஸ் மாஅதிபர் 

‘யுக்திய’ நடவடிக்கையை அமுலாக்குவதிலுள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சீர்செய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வரென பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, அண்ஸ்ரீமையில் தலதா மாளிகைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:

ஏனைய பணிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழி நடத்துவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அதிக திறனுடன் செயல்படுவார்களென நம்புகிறேன். பொலிஸ் அதிகாரிகளில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக, இதுவரை ஏனைய பணிகளில் அமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பொதுப்பணியின், குறிப்பாக குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply