முப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் : பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முழுமையாக நிறுத்தப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டு வரும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றின் மூலம் பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னாள் விஷேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் 2024 செப்டெம்பர் (22) பின்னர், விஷேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.

இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் 2024 செப்டம்பர் மாதம் 22 வரையே உரித்தாகும்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் இந்த கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply