இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா: மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
இதனால் மூன்றாம் உலகப் போர் அபாயம் குறித்து சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நேற்றைய தினம் சரமாரியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. தலைநகர் டெல் அவில் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக அமெரிக்க எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு உதவும் வகையில், அந்நாட்டை பாதுகாக்கவும், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் அமெரிக்க இராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இஸ்ரேல் கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் ஈரானின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் ஈரான் ஏவிய பல ஏவுகணைகள் இடை நடுவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் முடிவுக்கு வரும் வரையில் வெள்ளை மாளிகையில் இருந்து ஜோ பைடன் போர் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply