ரணில் பதவி விலக வேண்டும் : சஜித் கோரிக்கை
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பொறுப்பேற்று பொதுக் கூட்டணியொன்றை கட்டியெழுப்ப இயலுமான விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்க புறக்கணித்துள்ள நிலையில் இந்த கலந்துரையாடல்கள் இனிமேலும் தொடராது என பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், பொது எதிர்கட்சி கூட்டணிக்கு இணைய விருப்பம் இருக்குமெனின் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் வேட்பாளர் பதவியை வழங்குவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை என ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
“எனினுமம், பிரச்சினை என்னவென்றால், ஐக்கிய மக்கள் சக்தி விரும்பும் பொதுக் கூட்டணியின் சின்னமாக தொலைபேசி காணப்படுகிறது. கட்சியில் உள்ளடங்குபவர்களின் சின்னத்தில் இதுவரை எந்த கூட்டணியும் உருவாகவில்லை. அது பொதுவான அடையாளமாக இருக்க வேண்டும்” என சமன் ரத்னப்ரிய தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply