ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

வத்தளையில் நவலோக்க மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகளை சேகரித்த ஊடகவயிலாளர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு நடைபெற்ற பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply