யாழில். தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் மாணவன் ஒருவர் , தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி , கடந்த மூன்று மாத கால பகுதிக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாது , வீட்டில் இருந்து தொலைபேசி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாணவன் பாடசாலைக்கு மூன்று மாத காலப்பகுதிக்கு மேலாக சமூகமளிக்காததால் , பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் பெற்றோரின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்று , மாணவனை பாடசாலை அனுப்புமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால் , தந்தை மாணவனின் கையடக்க தொலைபேசியை பறித்து வைத்துள்ளார். அதனால் கோபமடைந்த மாணவன் வீட்டை விட்டு கடந்த 25ஆம் திகதி வெளியேறி சென்றுள்ளான்.
மாணவன் மீண்டும் வீடு திரும்பாததால் , பெற்றோர் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்தனர்
அந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை கிளிநொச்சியில் வசிக்கும் மாணவனின் உறவினர் ஒருவர், தனது வீட்டிலையே மாணவன் தங்கி இருந்ததாக கூறி மாணவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்து சென்றுள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை மாணவன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான்.
மரணம் தொடர்பில் மரண விசாரணைகளை மேற்கொண்ட , பின்னர் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் மாணவனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply