ஈரானின் அணு நிலைகளை தாக்குவதற்கு பைடன் எதிர்ப்பு

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் அணு நிலைங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது 180க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானிய அணு நிலைகள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதை ஆதரிப்பீர்களா என்று பைடனிடம் செய்தியாளர்கள் கடந்த புதனன்று கேட்டபோது, ‘இல்லை’ என்று பதல் அளித்தார்.

‘அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இஸ்ரேலுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தாம் ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் பேசியதாகவும் இஸ்ரேல் பதிலடி கொடுப்பதற்கான உரிமையை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அந்த பதிலடி ஒத்த வகையில் அமைய வேண்டும் என்று அவர்கள் நம்புவதாகவும் பைடன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply