செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் கலைஞர் அரசியலிலிருந்து ஓய்வு

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவையில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குப் பின்னர் பதவி விலகப்போவதாக சூசகமாக அறிவித்துள்ளார். கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தலித் மக்களுக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு என மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்ததற்காக அவருக்கு பாராட்டு விழா ஒன்று சென்னையில் நடந்தது.

கலைஞர் தனது ஏற்புரையில் தன்னுடைய ”மிச்சமிருக்கும் வாழ்நாள் முழுவதும் உங்களைப்போன்ற ஏழை எளிய மக்களுக்காக உங்களைப்போன்ற அடக்கப்பட்ட மக்களை அடலேறுகளாக மாற்றுவதற்காக உழைப்பேன்,” என்றார்.

அத்தகைய பணியில் ஈடுபட பதவி தடைக்கல்லாக இருக்கக்கூடும் என்பதால்.கோவை செம்மொழி மாநாடு முடிந்த பின் “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்,” என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply