மதவாச்சி சோதனை முற்றாக நீக்கம்; மன்னார் கோட்டையிலும் நீக்கப்படும்
மதவாச்சி சோதனை நிலையத்தில், கடந்த மூன்று வருடங்களாக நடைமுறையில் இருந்த சகல போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் நேற்றுப் பிற்பகல் 2 மணியுடன் நீக்கப்பட்டன. இனிமேல் எந்தவித சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எவையும் இன்றி வாகனம் போக்குவரத்துச் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது. அதே போல் மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் செய்யப்படும் சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளன என மன்னாரில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் வட பிராந்தியத்தில் இருந்து வெளிச்செல்பவர்களும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருபவர்களும் மதவாச்சியில் வைத்து சோதனை செய்யப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறாத வாகனங்கள் மதவாச்சி ஊடாக செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சகல வாகனங்களும் மதவாச்சியில் வைத்து சோதனை செய்யப்பட்டன.
நேற்றுத் தொடக்கம் மதவாச்சியில் உள்ள தடைமுகாம் திறக்கப்பட்டுள்ளது என்றும் சகல வாகனங்களும் எந்தவித பாதுகாப்பு அமைச்சு அனுமதியும் இன்றி மதவாச்சித் தடை முகாம் ஊடாகப் பயணம் செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மன்னார் நுழைவாயில் சோதணைகள் இம்மாதம் 10ம் திகதி முதல் நிறுத்தப்படும்.
மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மன்னார் நகர மண்டபத்தில் இன்று (05.12.2009) இடம்பெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பெயரில் மன்னாரிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவுக்கு மன்னார் நகர மண்டபத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
மன்னாரின் பல பாகங்களிருமிருந்து ஒன்று திரண்ட மக்கள் மன்னார் நகர மண்டபத்தின் முன் இருந்து நாதஸ்வர இசை முழங்க அழைத்து வந்து அவருக்கு பொண்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
நகர மண்டபத்தில் இடம் பெற்றிருக்கும் இன்றைய நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண ஆளுனர் பி.யு. சந்திரசிறி, பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியின் பொதுச்செயலாளர் சிறிதரன், சிறீ-ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சூசைதாசன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதன் போது மன்னாh மாவட்ட மக்கள் எதிர் நோக்கி வருகின்ற சமகால பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கடற்படையினரின் சோதணை சாவடிகளில் நிலவி வரும் நடவடிக்கைகள் மக்களின் இயல்பான நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாக சிறீ-ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் உதயராசா , பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியின் பொதுச்செயலாளர் சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சூசைதாசன் ஆகியோர் மக்கள் சார்பாக முன்வைத்தனர்.
இதனை அடுத்து வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் பஷில் ராஜபக்ஷ கரங்களை மேல் உயர்த்தி அசைத்து மன்னார் நகர மண்டபத்தில் உரையாற்றினார். இதன் போது இம்மாதம் 10ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கான பணிப்புரையினை சம்மந்தப்பட்டவர்களுக்கு அவர் வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் மன்னார் நகரில் கடற்படையினரின் நடவடிக்கைகள் மக்களை வேதனைகளுக்குள் தள்ளுவதாகவே அமைந்திருந்தது.
மன்னார் நகரின் நுழை வாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் தினமும் புதுப்புது சட்டங்களும் திட்டங்களும் அமுலாகி வந்த நிலையில் நிர்க்கதியான நிலைக்கு பொது மக்கள் அன்றாடம் தள்ளப்பட்டே வந்தனர்.
மன்னார் நகருக்குள் பிரவேசிக்கும் மன்னார் மாவட்டத்தை சோந்தவர்களே தீவுப்பகுதிக்கு வெளியே வசிக்கும் காரணத்திற்காக நகரின் நுழை வாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் கடற்படையினரிடம் தமது அடையாள அட்டைகளை ஒப்படைத்தே மன்னார் நகரிற்குள் நுழையவேண்டிய நிலை இருந்துவருகின்றது.
நகருக்குள் பிரவேசிக்கும் மன்னார் மக்கள் தினமும் தங்கள் தேசிய அடையாள அட்டைகளை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களினால் வழங்கப்படும் பாஸ் அட்டையை பெற்றே மன்னார் தீவுக்குள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போல் மாவட்டத்திற்கு வெளியே வசித்து வருபவர்கள் மன்னாரிற்குள் நுழையும் போது அவர்கள் தமது அடையாள அட்டைகளை கடற்படையினரிடம் ஒப்படைப்பதோடு நகரில் வதியும் நபர் ஒருவரையும் பிணையில் நியமித்தே மன்னார் நகருக்குள் நடமாட வேண்டும் எனும் நிர்ப்பந்தமும் நிலவி வருகின்றது.
இந்நிலையில் இன்று மன்னாரிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவின் மேற்படி அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெற்றிருப்பதோடு மிகுந்த மகிழ்ச்சியையும் தோற்றுவித்திருக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply