பலத்த காற்று கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.5-3.0 மீற்றர் வரை (இது கரைக்கு வரும் அலையின் உயரம் அல்ல) அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மீனவ மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மறு அறிவித்தல் வரை மேற்படி கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply