சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த Mitsubishi Montero ஜீப் வாகனமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply