2 பில்லியன் சொத்துகளை முகாம்களிலிருந்த மக்கள் வங்கிகளில் வைப்பு

வன்னியில் யுத்தம் காரணமாக முகாம்களில் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியிருந்த மக்கள் சுமார் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைப்புச் செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் பெரும்பாலும் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை இவ்வாறு வைப்புச் செய்துள்ளனர்.

நிவாரண கிராமங்களில் இயங்கி தற்காலிக வங்கிக் கிளைகளில் ஆயிரக் கணக்கான வைப்புக்கள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் மீள் குடியேற்றப்பட்டதன் பின்னர் வெளிநாடுகளில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் பணத்தின் அளவும் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. புலிகளின் நிர்வாகத் தலைநகரான முன்பிருந்த கிளிநொச்சி உள்ளிட்ட வன்னியில் பல இடங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply