யாழில் போலி கையொப்பம் வைத்து பெறுமதிமிக்க காணி மோசடி
ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணியொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ளவர் நாட்டுக்கு வராத காலப்பகுதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே இந்தக் காணி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வசிப்பவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களான இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் பல்கலைக்கழகமொன்றின் கல்விசாரா ஊழியராவார். இந்த இருவரும் காணி மீதான தமது பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.
அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே மேலும் இருவர் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply