டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,128 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் 17,472 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அதன் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply