இலங்கையின் முன்னேற்றம் IMF முகாமைத்துவ பணிப்பாளர் திருப்தி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அண்மையில் இலங்கை தூதுக்குழுவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் இடம்பெற்றது. இதன் போது இலங்கை தொடர்பில் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், தொடர்ந்து சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும்கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினரையே,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply