கொழும்பு கடற்பரப்பில் குண்டுச்சத்தங்கள்

கொழும்பு கடற்பரப்பில் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு அப்பால் இன்று அதிகாலை முதல் கடும் குண்டுச் சத்தங்கள் கேட்டன. 
 
சுமார் அரை மணிநேரமாக தொடர்ச்சியாகக் கேட்ட இந்தக் குண்டுச் சத்தங்கள், மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் கொழும்பு நகரின் கரையோரப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தாக்குதல் ஏதும் நடைபெறுகிறதோ என்ற அச்சத்துடன் மக்கள் பீதியுடன் கடற்கரையோரப் பகுதிகளுக்கு வந்து கடலைப் பார்த்தபடி இருந்தனர்.

எனினும், பின்னர் இது கடற்படையினரின் வழமையான பயிற்சி நடவடிக்கை என்று தெரியவந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply