எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 48 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கு 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இதேவேளை எல்பிட்டிய தேர்தல் தொகுதியை அண்மித்த பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply