எதிர்வரும் டிசம்பரில் மின் கட்டணம் குறைக்கப்படும்

மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 4-11 இடையிலான வீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசணையொன்றை முன்வைத்துள்ளது. இந்த யோசணை தொடர்பில் தற்போது ஆராய்நது வருவதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார சபையின் யோசணை தொடர்பில் ஆராய்ந்து தெளிவுப்படுத்தலின் பின்னர் அதனை செயற்படுத்த குறைந்தது ஒரு மாத காலம் எடுக்கும் எனவும் அதன்படி, மின் கட்டண திருத்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இடம்பெறும் எனவும் அறியக்கிடைக்கின்றது.

இந்நிலையில், மின் கட்டண திருத்தத்தை ஒரு வருடத்திற்கு நான்கு முறை அமுல்படுத்தும் தற்போதைய திட்டத்தை நிறுத்தி அதனை ஒரு வருடத்தில் இருமுறை மாத்திரம் அமுல்படுத்த இலங்கை மின்சார சபை, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாண்டிற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் கடந்த ஜூலை மாதம் 16ஆம் திகதி இடம்பெற்றது. அத்திருத்தத்தின்படி, மின் கட்டணம் 22.5 வீதத்தால் குழறக்கப்பட்டது.

மத வழிபாட்டு தலங்களில் மின் கட்டணம் 30 வீதத்தாலும் , ஹோட்டல் துறைகளில் மின் கட்டணம் 25 வீதத்தாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply