செனற் வெளியுறவுக் குழுவின் அறிக்கையும் பிளேக்கின் வருகையும்

இலங்கையுடன் முரண்பாட்டு அணுகு முறையைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கும் அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு தயாரித்துள்ள அறிக்கை முழுமையாக வெளிவர இருக்கும் இத்தருணத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகார அமைச்சர் றொபேட் பிளேக்கின் இலங்கை வருகை தற்செயலான `திடீர்` விஜயம் அல்ல.

அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு தயாரித்துள்ள அறிக்கையில், இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதற்கென கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வாக்கெடுப்பின் போது அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி அமெரிக்கா இலங்கைக்கான இராணுவ உதவியை குறைத்துள்ளது. எனினும் மேற்கு நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். இந்து சமுத்திரத்தில் ஐரோப்பாவையும் மத்திய கிழக்கையும் சீனாவுடனும் ஏனைய ஆசிய நாடுகளுடனும் இணைக்கும் வர்த்தக மார்க்கத்தில் ஒரு கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் றொபேட் பிளேக் இலங்கை வந்துள்ள சமயத்தில் மேற்படி அறிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது பயணத்தின் நோக்கத்தை நிறைவு செய்ய இந்த அறிக்கை உதவலாம்.

முன்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் இலங்கை அரசுடன் மென்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையையே பிளேக் கொண்டிருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply