நாடாளுமன்றத் தேர்தல்: 13421 வாக்குச் சாவடிகள்

இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 1,71,40,354 வாக்காளர்களுக்காக மொத்தமாக 13,421 வாக்குச்சாவடிகளை தயார்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, அதிகளவான வாக்காளர்கள் பதிவாகியுள்ள கம்பஹா மாவட்டத்தில் 18,81,129 வாக்காளர்களுக்காக 1212 வாக்குச் சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,65,359 ஆகும். அந்த வாக்காளர்களுக்காக மொத்தம் 1204 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

10,24,244 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள களுத்தறை மாவட்டத்தில் 735 வாக்குச்சாவடிகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தில் 108 வாக்குச்சாவடிகளை அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 90,607 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply