ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டுக் கரங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது. தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்ற நாளிலிருந்து இலங்கையின் நலனுக்கு முரணான வகையில் சில வெளிநாடுகள் செயற்பட்டு வந்ததொன்றும் புதிய விடயமல்ல.
உலக சமாதானத்தின் பாதுகாவலர்களாகத் தங்களை இனங்காட்டிக் கொள்ளும் வளர்ச்சியடைந்த நாடுகளே இலங்கையின் நலனுக்கு முரணாகச் செயற்பட்டவை. அந்த நாடுகளே இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்யும் குற்றச்சாட்டுக்கு உட்படுகின்றன.
வளர்முக நாடுகளைத் தங்கள் நுகத்தடிக்குக் கீழ் வைத்திருக்கும் செயற்பாடு சாத்தியப்படாத பட்சத்தில் சர்வதேச அரங்குகளிலும் உள்நாட்டிலும் அந்நாடுகளுக்கு எதிரான காய் நகர்த்தலில் ஈடுபடுவது வளர்ச்சியடைந்த நாடுகளின் வழமை.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் எப்போதும் இந்த நாடுகளுக்குப் பணிந்து செயற்பட்டதால் அந்த அரசாங்கங்கள் மேற்கத்திய நாடுகளின் கைப்பொம்மைகளாகவே செயற்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதை மேற்கத்திய நாடுகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
உண்மையான நட்பு நாடுகளிடமிருந்து உதவி பெற்று இலங்கை அபிவிருத்திப் பாதையில் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசிய தோடு இலங்கைக்குக் கடனுதவி வழங்குவதிலும் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் மேற்கத்திய நாடுகள் முன்வைத்தன.
இவ் வாறான அழுத்தங்களுக்குப் பணிந்து போகாமல் இலங்கை நட்பு நாடுகளின் உதவியுடன் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை நுழைக்கின்றன.
தங்களுக்குப் பணிந்து போகாத நாடுகளில் உள்நாட்டு சக்தி களைப் பயன்படுத்தி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய வரலாறு மேற்கத்திய நாடுகளுக்கு உண்டு. இலங்கையிலும் அந்த அணுகுமுறையையே அவை பின்பற்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்வது சிரமமானதல்ல.
எதிரணி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே நிறுத்தியிருக்கின்றன. இவையி ரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகள். இவையிரண்டும் பொது வேலைத் திட்டமொன்றின் அடிப்படையில் ஒன்றுபடவில்லை.
பொரு ளாதார, சமூக விடயங்களில் பொதுவான உடன்பாடு இவற்றுக்கிடையே ஏற்படுவது சாத்தியமில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற ஒரேயொரு கொள்கையின் அடிப்படையிலேயே இவை கூட்டுச் சேர்ந் திருக்கின்றன.
அந்த நோக்கம் நிறைவேறிய பின் எதிரும் புதிருமான நிலைப் பாட்டை இக்கட்சிகள் எடுக்கும்போது நாடு சீரழிந்து விடும் என்பது பற்றி இக் கூட்டின் பின்ன ணியில் செயற்படுபவர்களுக்கு எவ்வித அக்கறையும் கிடை யாது. இக் கூட்டின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பது தெளிவானது.
சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவித்தார். வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய சோமவன்ச அமரசிங்க, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஜீ.எஸ்.பி. + சலுகையை வழங்கு வதற்கு அந்நாடுகள் ஒத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
தேர்தல் பிரசார வேலைகளில் பங்குபற்றாமல் ரணில் விக்கிரமசிங்ஹ வெளிநாட்டுக்குச் சென்றிருக்கின்றார். இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக இருந்த காலத்தில் சர்ச்சைக்கு உட்பட்டவரான பிளேக் உதவி இராஜாங்க செயலாளராக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார்.
இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது எதிரணி வேட்பாளருக்குப் பின்னால் வெளிநாட்டுக் கரங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நோக்கிய இலங்கையின் முன்னேற்றப் பயணத்தைத் திசைதிருப்புவதற்கு வெளிநாட்டு சக்திகள் மேற்கொள்ளும் முயற்சியை இலங்கை மக்கள் முறியடிப்பார்களென நம்புகின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply