பிரதமரை சந்தித்தார் ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனி (Kunle Adeniyi) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை வியாழக்கிழமை (31) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அடனி பாராட்டினார்.

ஆண் – பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் ஆண் – பெண் சமத்துவம், பெண்களின் பொருளாதார செயற்பாடுகள், ஆண் – பெண் சமூகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை கையாள்கை மற்றும் இலங்கையில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கான தீர்மானம் மிக்க பணிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார்.

கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன் தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாகவும் பிரதமர் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, தேசிய செயற்றிட்டத்தின் பகுப்பாய்வாளர் (ஆண் – பெண் சமூகத்தன்மை / GBV) பிமலீ அமரசேகர, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர முதலான அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply