உள்ளூராட்சி சபை அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் உள்ளுராட்சி சபையின் பணி மேற்பார்வையாளர் நேற்று (03) கோண்டாவில் பகுதியில் உள்ள இடமொன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலத்தில் வெளிப்புற காயங்களோ, இரத்தக் கசிவோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் மரணத்திற்கான காரணம் அல்லது இறந்த விதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உறவினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிடம் நான்கு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply