காசாவில் 50 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: இஸ்ரேலை கண்ணடித்த ஐ. நா.சிறுவர் நிதியம்
காசா பகுதியில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கண்டித்துள்ளது. கடந்த 03 நாட்களில் மாத்திரம் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் 50 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் போலியோ தடுப்பூசி மையத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு லெபனானில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை லெபனானின் வடக்கில் தமது பிரஜை ஒருவரை இஸ்ரேல் கடத்திச் சென்றது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என லெபனானின் பிரதமர் நஜிப் மிகாட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன்ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply