கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட இரு அதிகாரிகளுக்கு பணி இடைநீக்கம்
மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரி மற்றும் சேமிப்புத் திணைக்களத்தின் பாதுகாவலர் ஆகியோரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply