அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் : ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அதிகார பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் என்று தற்போதைய அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.

முன்னதாக, தோ்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு பைடன் வியாழக்கிழமை ஆற்றிய உரையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தோ்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்புக்கு தொலைபேசியில் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தேன். அவரின் ஆட்சிக்கு அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் செய்ய பணியாற்றுமாறு எனது ஒட்டுமொத்த நிா்வாகத்துக்கும் உத்தரவிடுவேன் என்று அவரிடம் உறுதி அளித்தேன். ஜன.20-ஆம் திகதி அதிபராக டிரம்ப் பதவியேற்கும்போது அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெறும். தோ்தல் முடிவுகளை அமெரிக்கா்கள் அனைவரும் ஏற்க வேண்டும்’ என்றாா்.

கடந்த 2020-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து, வெள்ளை மாளிகையைவிட்டு டிரம்ப் வெளியேறுவதில் பெரும் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply