தென் கொரியாவில் மீன்பிடி படகு மூழ்கி இருவர் உயிரிழப்பு 12 பேர் மாயம்

தென் கொரியாவின் ஜெஜு தீவில் வெள்ளிக்கிழமை மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் இரண்டு பேர் உயிரழந்துள்ளதுடன், 12 பேர் காணமால் போயுள்ளனர். 129 தொன் எடையுள்ள படகு கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு கடலில் மூழ்குவதாக முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து, அருகிலுள்ள மற்றொரு படகு எச்சரிக்கையை எழுப்பிய நிலையில், மீட்பு நடவடிக்கையை ஜெஜூ தீவின் கடலோர காவல்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

மீன்பிடி படகில் இருந்த 27 பணியாளர்களில், 15 பேர் மீட்கப்பட்டனர். அதில் இரண்டு தென் கொரிய பிரஜைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காணாமல்போயுள்ளனர். அவர்களில் இருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

மூன்று கடற்படைக் கப்பல்கள், 13 விமானங்கள் மற்றும் பல ஆழ்கடல் சுழியோடிகள் உட்பட மொத்தம் 43 கப்பல்கள் மீட்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறாக “நாங்கள் இழந்த குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம், மேலும் அனைத்து மீட்பு உபகரணங்களையும் வளங்களையும் திரட்டுவதன் மூலம் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மிகுந்த முயற்சிகளை மேற்கொள்வோம்” என ஜெஜூ தீவின் கடலோர காவல்படை அதிகாரி சுங் மூ-வோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply