2024 பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி
பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அமைதியும் சுதந்திரமுமான தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுமக்கள் தமது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், நேர காலத்தோடு சென்று வாக்களித்து, வீடுகளுக்கு சென்று அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் நாளை 14ஆம் திகதி பிற்பகல் 4:15 மணியளவில் ஆரம்பமாகுமென்றும் அன்று நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுடன் சம்பந்தப்பட்ட மீதியான தினங்களிலும் அமைதியாக செயல்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்ததுடன் தேர்தல் தினத்தில் ஏதாவதொரு வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகள் ரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply