வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு : தேர்தல் பணிகளில் 5000 அரச ஊழியர்கள்
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள 387 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்தார்.வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் 152, முல்லைத்தீவில் 137, மன்னாரில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன.
இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 306081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வவுனியாவில் 128585 பேரும் முல்லைத்தீவில் 86889 பேரும் மன்னாரில் 90607பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 3898 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரை 107 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 50 முறைப்பாடுகளும் மன்னார் மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும் முல்லைத்தீவில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளன.
இதேவேளை வவுனியாவில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம், முல்லைத்தீவில் மத்திய மகா வித்தியாலயம் ஆகியவை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply