பெரும்வெற்றிகள் கொண்டுவரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் : சாலிய பீரிஸ்

பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது அல்லது அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் நெருங்கிச்செல்லலாம்.

தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் விகிதாச்சார பிரதிநிதித்து முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

2010 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டை நோக்கி நெருங்கிச்சென்றது,2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவும் மூன்றில் இரண்டை நெருங்கிச் சென்றது மூன்றில் இரண்டை பெறுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியை மாத்திரம் இந்த வெற்றியுடன் சமாந்திரம் வரையமுடியும்.

தேசிய மக்கள் சக்தி வடக்குகிழக்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளதால் இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஐக்கியப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி விளங்க முடியும்.

இந்த தேர்தல் வெற்றி நிறைவேற்றதிகார முறையை நீக்குவேன் என்ற தனது வாக்குறுதியை ஜனாதிபதி விரைவில் நீக்குவதற்கு உதவும்.

ஜனாதிபதியாக அனுரகுமாரதிசநாயக்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாடு சென்றுகொண்டிருக்கின்ற பாதை குறித்து அனேக இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,குறிப்பாக அரசியல் கலாச்சாரத்தின் மாற்றம் குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி காணப்படுகின்றது.

எனினும் பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஜனாதிபதியே நேற்று தெரிவித்தது போன்று அரசியல் சக்திகள் கடந்த காலங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்காக மூன்றில்இரண்டு பெரும்பான்மைகளை பயன்படுத்தியிருந்தன.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதல்களை தேசிய மக்கள் சக்தி தவிர்க்கவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply