தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் : எரிக்சொல்ஹெய்ம்
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அனுரகுமார திசநாயக்க அல்லது மக்களால் ஏகேடி என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான தேர்தல் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார்.அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இது இலங்கைக்கு என்னதேவையோ அதனை செய்வதற்கான வலுவான வாக்குறுதியை வழங்குகின்றது.
1
நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல்
2
பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை அதன் பிடியிலிருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம்.
3
தேசிய நல்லிணக்கம் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களிற்கான உரிமைகள்.
4
ஊழலிற்கு எதிராக கடுமையான போராட்டம்
5
சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல்,சதுப்பு நிலங்கள் வனங்கள் வலுச்க்தி மேலும் சில.
இலங்கையின் அனைத்து நண்பர்களும் அதற்கு உதவ தயாராகவேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply