அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் : நிபுணர்கள்

இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்த விபரங்கள் வேறு நியாயாதிக்கங்களி;ல் அம்பலமாவதை பார்த்திருக்கின்றோம் என கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு வெளியானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டோரா பேப்பரில் உள்ளுர் அரசியல்வாதிகள்,வர்த்தகர்களின் பெயர்கள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ள அவர் நிசான் டிமெல் ஊழல் உடன்படிக்கைகளில் இருந்து நாங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஊழலிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை இலங்கை இரட்டிப்பாக்குவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் இலஞ்ச ஊழல் தொடர்பான புதிய விபரங்கள் வெளியானதும், இலங்கையில் அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுரகுமார திசநாயக்கவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தியும் ஊழலை ஒழிக்கப்போகின்றோம் என வாக்குறுதியளித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனது தேர்தல் வெற்றிக்கு முன்னதாக அனுரகுமாரதிசநாயக்க அதானிகுழுமத்தின் திட்டங்களை இரத்துச்செய்வேன் என தெரிவித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply