சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட தம்பலகாமம் பாலம் போட்டாறு கிராமத்துக்கு அமைச்சர்கள் குழு ஒன்று கண்காணிப்பு விஜயம்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு தி/விநாயகர் தமிழ் வித்தியாலயத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடை தங்கல் முகாமில் உள்ள மக்களை வெள்ளிக்கிழமை (30) அமைச்சர்கள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அனர்த்த கிராமிய மட்ட முன்னெடுப்புக்கள், நீர் வடிந்தோடக்கூடிய வழிவகைகள் தொடர்பிலும் இடைத் தங்கல் நிலையத்தில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் இதன் போது கேட்டறிந்து கொண்டனர்.

குறித்த அமைச்சர் குழுவில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன ஆகியோர்கள் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர் சித்திக், பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கரூபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply