உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும்: கைத்தொழில் அமைச்சர் அறிவிப்பு
உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அனைத்துப் பொருட்களில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கட்டுபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபைவுக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”இதுவரை காலமும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக கைத்தொழில் துறை செயல்பட்டது. ஆனால், நாட்டின் முழு கைத்தொழில் துறையையும் கட்டியெழுப்பி உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
கைத்தொழில்துறையினருக்கு வசதிகளை வழங்கும் பிரதான அரச நிறுவனமான கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பணிகளை சிறப்பாக வழிநடத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கைத்தொழில்துறை மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சின் கீழ், உள்ளூர் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்களை கட்டியெழுப்ப சரியான திசையில் பயணிப்பதற்கான வழிகாட்டகள் செய்யப்படும்.
கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் 33 நிறுவனங்களும், தொழில் முயற்சியான்மை அமைச்சின் கீழ் மேலும் 17 நிறுவனங்களும் உள்ளன. ஆனால், பெரும்பாலான தொழில் வலயங்கள் அரசியல் காரணிகளுக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த தொழில் வலயங்கள் தேசிய திட்டத்தில் செயல்படாமல் அரசியல் திட்டத்துக்காக செயல்பட்டன.
தற்போதைய அரசாங்கம் தேசிய தொழில் திட்டத்தின்படி தொழில் வலயங்கள் உட்பட நாட்டின் ஏனைய தொழில்களை கட்டியெழுப்புவதற்கு செயற்பட்டு வருகின்றது. இந்த தேசிய திட்டத்தின் கீழ், தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும் அதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்து அத்தியாவசிய பொருட்களை மட்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கைத்தொழில்துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கைத்தொழில் அமைச்சு தயாராக உள்ளது.
கைத்தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவது தொடர்பாக தொழில்துறையினருக்கு உத்தரவாதம் வழங்குகிறோம்.” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply