மன்னார் நுழைவாயில் சோதனைகள் இதுவரை நிறுத்தப்படவில்லை
மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ம் திகதி முதல் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்திருந்த போதும் அது இதுவரையிலும் அமுலுக்கு வரவில்லை.
அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பெயரில் இம்மாதம் 5 ம் திகதி (05.12.2009) மன்னாருக்குக் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ மன்னார் நகர மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதன் போது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் எனவும் அதற்கான பணிப்புரைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படடிருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
ஆயினும் குறித்த தினமான இம்மாதம் பத்தாம் திகதி மேற்படி கோட்டை காவலரனின் நடவடிக்கைகள் எதுவும் குறைவடையவில்லை எனவும் வழமை போன்றேசோதனைகள் இடம்பெறுவதாகவும் தெரிய வருகின்றது.
மன்னார் நுழைவாயில் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் சோதனைச்சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்படாமையானது மக்களை ஏமாற்றத்திற்குள் தள்ளியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply