சரத் பொன்சேகா அரசியலில் கற்றுக்குட்டி
சரத் பொன்சேகா அரசியலில் கற்றுக்குட்டி என்பது அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்தமையில் இருந்து வெளிப்படுகிறது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் ஐ. ம. சு. மு. வின் செய்தியாளர் சந்திப்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐ. தே. க. – ஜே. வி. பி. கூட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு காரணமாக அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாரிய முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
ஐ. ம. சு. முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் அபேட்சகரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், எதிரணி அபேட்சகருக்கு பிரசாரம் செய்யக் கூட ஆளில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கோஷங்களை களவாடியே சுவரொட்டி வெளியிடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இவரது அறிவிப்புபடி 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாயின் வருடத்திற்கு 120 பில்லியன் ரூபா தேவை ஆகவே, பொருளாதாரம், திறைசேரி குறித்த அறிவு இருந்திருந்தால் அவர் இவ்வாறு அறிவித்திருக்க மாட்டார்.
சரத் பொன்சேகா அரசியலில் கற்றுக்குட்டி என்பது அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்தமையில் இருந்து வெளிப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply